அரசு பணிக்கு இத்தகைய படிப்புகள் தகுதி இல்லை: உயர் கல்வித்துறை அரசாணை?
அரசு வேலைக்கு இந்த படிப்புகளை படித்தோர் தகுதி இல்லை என்று உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டு இருக்கிறது.
வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு ஒத்துப்போகும் வகையில் தற்பொழுது உயர் கல்வித் துறையில் பல்வேறு புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அவ்வப் போது புதிய புதிய படிப்புகளும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றுமாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இருக்கும் பட்டப்படிப்புகளுக்கு இணையாக இருக்குமா? அல்லது அரசு பணிக்கு இவை தகுதியான பட்டப்படிப்பா? என்பது குறித்து அவ்வப்பொழுது அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் உயர் கல்வித் துறை உதவியை படிப்புகள் படித்தோர் அரசு வேலைக்கு தகுதியானவர் அல்ல என்று அரசாணையை வெளியிட்டு இருக்கிறது. அந்த வகையில் தற்பொழுது அரசு பணிக்கு கல்வி தகுதியாக கருதப்படும் படிப்புகள் குறித்து அரசாணை உயர் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை தொழில்நுட்ப கல்லூரி வழியாக M. Sc பயன்முறை வேதியல், திருச்சி நேஷனல் கல்லூரியின் M. Sc பகுப்பாய்வு வேதியல், பனாரஸ் ஐஐடி வாரணாசி,
இந்துப் பல்கலைக்கழகம் வழங்கும் எம்.டெக் தொழில் துறை வேதியல், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் M.Sc வாழ்க்கை அறிவியல் ஆகியவை, எம்.சி.ஏ முதுகலை அறிவியல் வேதியல் கல்வி தகுதிக்கு அரசு வேலை செய்வதற்கான ஏற்புடையதான கல்வி தகுதி இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்தகைய படிப்புகளை படித்தோர் அரசு வேலைக்கு தகுதியானவர்கள் அல்ல என்று கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: Dinamani