250 ஏக்கர் பரப்பிலான கண்மாயில் நடைபெற்ற மீன்பிடித் திருவிழா!

Update: 2022-03-27 01:32 GMT

மதுரை மாவட்டத்தில் திருவாதவூர் என்ற பெரிய கண்மாயில் பாரம்பரியமிக்க மீன்பிடி திருவிழா நடைபெற்றுள்ளது. மதுரை மாவட்டம், மேலூர் அருகே உள்ளது தருவாதவூர். இங்கு சுமார் 250 ஏக்கர் பரப்பளவு கொண்டு பெரிய கண்மாய் பாண்டியர்களால் வெட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பல நூறு ஆண்டுகளாக மீன்பிடித் திருவிழா நடைபெற்று வருகிறது.

அதே போன்று இந்த ஆண்டும் நடைபெற்ற திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று மீன்களை பிடித்தனர்.

இதில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என பாகுபாடின்றி அனைவரும் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் விரால், சிலேபி, கட்டளா என பல வகையிலான மீன்களை அள்ளிச்சென்று சமைத்து சாப்பிட்டு மகிழ்ச்சியடைந்தனர். இது போன்ற பாரம்பரிய திருவிழா அனைத்து ஊர்களிலும் நடைபெற வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பமாகும்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News