37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் !
தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 37 மாவட்ட கல்வி அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் கூறியிருப்பதாவது: ஜே.ஆஞ்சலோ இருதயசாமி முதன்மை கல்வி அலுவலர் செங்கல்பட்டில் இருந்து கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜே.அனிதா முதன்மைக் கல்வி அலுவலர் சென்னையில் இருந்து இராணிப்பேட்டை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
எம்.இராமகிருஷ்ணன் முதன்மை கல்வி அலுவலர் கோவையில் இருந்து ஈரோடு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கே.ரோஸ் நிர்மலா முதன்மை கல்வி அலுவலர் கடலூர் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
என்.கீதா முதன்மை கல்வி அலுவலர் தருமபுரியில் இருந்து கோவைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ச.செந்திவேல்முருகன், முதன்மை கல்வி அலுவலர் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆர்.முருகன் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
க.முனுசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
பி.ஏ.ஆறுமுகம் முதன்மை கல்வி அலுவலர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
எம்.கபீர் முதன்மை கல்வி அலுவலர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தென்காசிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கே.பி.மகேஸ்வரி முதன்மை கல்வி அலுவலர், கரூர் மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ர.பாலமுரளி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார்.