மதுரை: அரசுப் பள்ளியை சேர்ந்த 4 மாணவிகள் நீட் தேர்வில் வென்று, மருத்துவப் படிப்புக்கு தேர்வு!
மதுரையில் அரசு மாநகராட்சிப் பள்ளியில் படித்த 4 மாணவிகள் 7.5 சதவீதம் உள் இடஒதுக்கீட்டின் படி மருத்துவம் படிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு சமீபத்தில் வெளியாகியது. அதில் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் நுழைவுத் தேர்வுக்கு முன்னர் பணம் படைத்தவர்கள் மட்டுமே மருத்துவம் படித்து வந்தனர். ஏழை, எளியோர்கள் மருத்துவம் படிப்பது எட்டாக்கனியாகவே இருந்தது. தற்போது நீட் நுழைவுத் தேர்வால் ஏழை, எளியோர்களும் மருத்துவம் படிப்பதற்கு தேர்ச்சி அடைந்து வருகின்றனர்.
அதே போன்று தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை கடந்த அதிமுக அரசு அமல்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளி மாணவர்கள் ஏராளமானோர்கள் மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு மதுரை மாநகராட்சி அவ்வை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 4 மாணவிகளுக்கு மருத்துவ இடம் கிடைத்துள்ளது. அதில் ஒரு மாணவிக்கு பல் மருத்துவ இடமும் கிடைத்துள்ளது.
Source, Image Courtesy: Hindu Tamil