49வது GST கவுன்சில் கூட்டம்: ரூ. 16,982 கோடி இழப்பீடாக வழங்க முடிவு!

ஜூன் மாதத்துக்கான நிலுவையில் உள்ள மொத்த GST இழப்பீடாக ரூ. 16,982 கோடியை விடுவிக்கிறது.

Update: 2023-02-21 05:09 GMT

ஜூன் மாதத்துக்கான நிலுவையில் உள்ள மொத்த ஜி.எஸ்.டி இழப்பீடாகரூ. 16,982 கோடியை விடுவிக்கிறது. சில மாற்றங்களுடன் ஜி.எஸ்.டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தில் அமைச்சர்கள் குழுவின் அறிக்கையை ஜி.எஸ்.டி கவுன்சில் ஏற்றுக்கொண்டது. தமிழ்நாட்டுக்கான ரூ.1201 கோடி விடுவிக்கப் படுகிறது. 49வது ஜி.எஸ்.டி கவுன்சில் மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் புதுடெல்லியில் கூடியது. கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி அமைச்சர்கள், நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.


சரக்கு மற்றும் சேவைகள் மீதான ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கான பிற நடவடிக்கைகள் ஜி.எஸ்.டி இழப்பீடு, ஜி.எஸ்.டி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், திறன் அடிப்படையிலான வரிவிதிப்பு தொடர்பான அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் ஒப்புதல் தொடர்பான பின்வரும் பரிந்துரைகளை ஜி.எஸ்.டி கவுன்சில் வழங்கியுள்ளது. 2022 ஜூன் மாதத்திற்கு நிலுவையில் உள்ள மொத்த ஜிஎஸ்டி இழப்பீடு ரூ. 16,982 கோடியாகும்.


ஜி.எஸ்.டி இழப்பீட்டு நிதியில் எந்தத் தொகையும் இல்லாததால், இந்தத் தொகையை அதன் சொந்த ஆதாரங்களில் இருந்து விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. எதிர்கால இழப்பீடு செஸ் வசூலில் இருந்து திரும்பப் பெறப்படும். கூடுதலாக, மாநிலங்களின் தலைமை கணக்காளரால் சான்றளிக்கப்பட்ட வருவாய் புள்ளிவிவரங்களை வழங்கிய மாநிலங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய இறுதி ஜி.எஸ்.டி இழப்பீடான ரூ 16,524 கோடியையும் மத்திய அரசு வழங்கும்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News