7'ஆம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட அரசு பள்ளி தலைமை ஆசிரியர் 'லாரன்ஸ்' !
கிருஷ்ணகிரி : அரசுப் பள்ளியில் பயிலும், 7ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை, பொதுமக்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு பள்ளி ஒன்றுக்கு 'லாரன்ஸ்' என்பவர் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறார். இவரது பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு மாணவியிடம் இவர் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இச்செய்தி அறிந்த அம்மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் என அனைவரும் பள்ளிக்குச் சென்று, தலைமையாசிரியர் லாரன்ஸிடம் முறையிட்டனர். பின்பு லாரன்சை கடுமையாக தாக்கி, அவர் பயன்படுத்தி வந்த சொகுசு நான்கு சக்கர வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர்கள் காவல் துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கவே, லாரன்ஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.