சிவகங்கை: கீழடியில் ஏழாம்கட்ட அகழ்வாய்வில் தென்பட்ட உறைகிணறு.!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்துள்ள கீழடி மற்றும் அகரத்தில் 7ம் கட்ட அகழ்வாய்வின் போது உறை கிணறு மற்றும் சுடுமண் பெண் பொம்மை ஆகியவை கிடைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அடுத்துள்ள கீழடி மற்றும் அகரத்தில் 7ம் கட்ட அகழ்வாய்வின் போது உறை கிணறு மற்றும் சுடுமண் பெண் பொம்மை ஆகியவை கிடைத்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரியம் அனைத்தும் கீழடி அகழ்வாய்வில் ஒவ்வொன்றாக தென்பட்டு வருகிறது. இதுவரை ஆறு கட்ட அகழ்வாய்வில் பல்வேறு பொருட்கள் கிடைத்தது.
இந்நிலையில், கீழடி, கொந்தகை, அகரம் மணலூர் ஆகிய பகுதிகளில் 6 மாதங்களாக 7ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. கீழடியில் 7 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடந்து வரும் நிலையில், அங்கு மேலும் ஒரு உறை கிணறு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட உறை கிணறு விளிம்பில் அலங்கரிப்புடன் 58 சென்டி மீட்டர் விட்டம், 3 சென்டி மீட்டர் தடிமன் கொண்டு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.