குழந்தைகளுக்காவது உணவு கொடுங்கள் - தமிழகம் வரும் இலங்கை அகதிகளின் அவல நிலை

Update: 2022-06-19 00:43 GMT

நான்காம் மணல் திட்டில் 4 குழந்தைகள், 2 பெண்கள் உட்பட 7 பேரைப் பிடித்து மண்டபம் காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் வரலாறு காணாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பிரதமரை மாற்ற வேண்டும் என்ற போராட்டம் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு பின்னர் பிரதமராக ரனில் விக்ரமசிங் பதவியேற்றார். இருந்தபோதிலும் இலங்கையில் இருந்தால் வாழ்வதற்கு வழியில்லை என்று கடல் வழியாக தப்பித்து பல்வேறு நாடுகளுக்கு இலங்கை மக்கள் அகதிகமாக படையெடுத்து வருகின்றனர். அதே போன்று தமிழகத்திற்கும் ஏராளமானோர்கள் சட்டவிரோதமாக வருகின்றனர். கடல் வழியாக உயிரைப் பணயம் வைத்து படகுகளில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 84 பேர் அகதிகளாக தமிழகத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் இருந்து இந்தியாவுªகு ஊடுருவதை தடுக்க கடலோர காவல்குழு தீவிரமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. அதனையும் மீறி இன்று காலை ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை நான்காம் மணல் திட்டில், குழந்தைகளுடன் சிலர் இருப்பதாக போலீசாருக்கு மீனவர்கள் தகவல் அளித்தனர். அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்கள் இலங்கை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த தாஸ்நிவாஸ் 40, அவரது மனைவி ரஞ்சனி மற்றும் அவர்களின் குழந்தைகள் மூன்று பேர் என்பது தெரியவந்தது. மற்ற இரண்டு பேர் திரிகோணமலை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இலங்கையில் தொழில்கள் முடங்கியிருப்பதால் வேலையில்லாத சூழல் ஏற்பட்டது. இதனால் சாப்பிடுவதற்கு கூட வழியில்லாமல் இந்தியாவுக்கு தப்பி வந்தோம் என்றனர். அவர்களை போலீசார் அகதி முகாம்களில் தங்க வைத்தனர். இது தொடர்பாக அகதிகள் கூறியதாவது எங்களின் பிள்ளைகளுக்கு உணவு கூட கிடைப்பதில்லை. இதனால்தான் நாங்கள் இந்தியாவை நோக்கி வருகின்றோம். இங்கு வந்தால் எதாவது உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எங்கள் பிள்ளைக அழைத்துக்கொண்டு தமிழகத்திற்கு வந்தோம் என்றனர்.

Source, Image Courtesy: Vikatan

Tags:    

Similar News