9 வருட பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகள் இவ்வளவா.. பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா!
திருவண்ணாமலையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் SG.சூர்யா அவர்கள் 9 ஆண்டுகள் பிரதமர் மோடி ஆட்சியைப் பற்றி பேசியிருக்கிறார்.
திருவண்ணாமலை தெற்கு தொகுதியில் நடைபெற்ற 9 ஆண்டுகால பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியின் கீழ் மக்கள் அடைந்த பயன்கள் மற்றும் ஆட்சியின் சாதனைகள் குறித்து பத்திரிக்கையாளர் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜே.சூர்யா கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு ஒன்பது ஆண்டுகால சாதனைகளை எடுத்துரைத்தார். அந்த பேட்டியின் போது அவர் கூறுகையில், உலகம் முழுவதும் நோய் தொற்று காலத்தின் போது சாலையோர வியாபாரிகளுக்கு எந்த ஒரு பிணையமும் இன்றி தேடி தேடி வங்கி மூலம் கடன் கொடுத்த ஒரே நாடு இந்தியா. நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து பயனாளிகளுக்குமான ஸ்வநிதி சம்ரிதி அம்சம் நீட்டிக்க பட்டுள்ளது. 2022 நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி, 31.73 லட்சம் வீதியோர வியாபாரிகள், முதல் கடன் தொகையை பெற்றுள்ளனர். இதில் 5.81 லட்சம் பேர், ரூ. 20,000 இரண்டாவது கடனைப் பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மட்டும் 2,43,092 சாலையோர வியாபாரிகளுக்கு சுமார் ₹300.84 கோடியை கடனாக மத்திய அரசு வழங்கி இருக்கிறது. 11 கோடி விவசாயிகளுக்கு பிரதமர் மோடி நேரடியாக வருடம் ₹6,000 வங்கி கணக்குகளில் செலுத்துகிறார். ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு மக்களை அலைக்கழித்து பணத்தை தருகின்றனர். இதில் மிகப்பெரிய ஊழல் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக 3 கோடியே 80 லட்சம் மக்களுக்கு மாதாமாதம் இலவசமாக அரிசியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்குகிறது.
32 லட்சம் டன் அரிசி வருடம் தோறும் தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்குகிறது. இதில் ஏராளமான ஏழை எளிய மக்கள் பயனடைந்து இருக்கிறார்கள். வங்கி கணக்கின் மூலமாக மத்திய அரசாங்க நலத்திட்ட உதவிகள் மக்களிடம் சென்றடைந்தது என்று தமிழக பா.ஜ.க மாநில செயலாளர் SG சூர்யா திருவண்ணாமலையில் பேட்டியில் இப்போது குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Twitter