ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழா ! தருமபுரி எஸ்.பி. தொடங்கி வைப்பு !

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட எர்ரபையனஹள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-09-06 04:56 GMT

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட எர்ரபையனஹள்ளியில் ஆசிரியர் தினவிழாவை முன்னிட்டு 1000 மரக்கன்றுகள் நடும் விழாவில் மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகாவிற்குட்பட்ட எர்ரபையனஹள்ளி ஊராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் மரக்கன்று நடும் பணியானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணியானது ஊராட்சி மன்றத் தலைவர் சிலம்பரசன் தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15, சுதந்திர தினவிழாவின் போது தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மரக்கன்று நட்டு பணியை துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தருமபுரி மாவட்ட எஸ்.பி. கலைச்செல்வன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சால்வை அணிவித்து கவுரவித்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் தமிழாசிரியர் சசிகுமார் வரவேற்றார்.

இதன் பின்னர் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணியை எஸ்.பி. கலைச்செல்வன் மரக்கன்று நட்டு அடுத்த கட்ட பணியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் எர்ரபையனஹள்ளி ஊராட்சி மன்ற தலைவர் சிலம்பரசன் மற்றும் ஆசிரியர் பெருமக்கள் ராமசாமி, ராஜா ஏழுமலை, லோகநாதன், பழனியம்மாள் அறிவரசு, சின்னமுத்து, முருகன், குழந்தைவேல், வீரமணி, சின்னதுரை, முருகன், பால கிருஷ்ணன், கிருஷ்ணன், செந்தில், சுப்பிரமணி கௌரன், ஜீவா, சிலம்பரசன், சங்கர், நாகராஜ் மூர்த்தி, வெங்கடேஷ், சந்திரன், ஸ்ரீகுமார், சேகர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மேலும் சமூக ஆர்வலர்கள் ஆதிமூலம், சுகுமாரன் மற்றும் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் அறிவழகன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு தருமபுரி மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரஞ்சித் குமார் மற்றும் வார்டு உறுப்பினர்கள் முருகன், மாது, மாரிக்கண்ணு, சுதா, சக்திவேல் மற்றும் அனைத்து ஊராட்சி பணியாளர்கள் மற்றும் செயலர், இயற்கை காப்போம் அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News