போலீஸ் ஜீப் மோதி தாய், மகள் படுகாயம்: அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக திசை திருப்பும் போலீசார்?
கள்ளக்குறிச்சியில் அம்மாவும், மகளும் சென்று கொண்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தின் மீது ரோந்து பணியில் இருந்த போலீஸ் ஜீப் மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில், அவர்களிடம் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக வழக்குப்பதிவு செய்யுமாரு போலீசார் கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அருகே இருக்கும் மாதவச்சேரி கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்த பிரபாவதி 35, மற்றும் அவரது தாய் சியாமளா இருவரும் கள்ளக்குறிச்சியில் உள்ள வங்கிக்கு செல்வதற்காகாக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
அப்போது அவர்களுக்கு பின்னால் இருந்து வந்த போலீஸ் ரோந்து ஜீப், மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருவரும் சிறிது தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். அப்போது வலியால் கதறி துடித்துள்ளனர். இதன் பின்னரே போலீஸ் ஜீப் நின்றுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் உள்ளவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பெறுவதற்காக சென்று விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது போலீஸ் ஜீப் மோதியதாக கூறவேண்டாம் அடையாளம் தெரியாத தண்ணீர் லாரி மோதிவிட்டது என்று சொல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண்கள் வழக்கை திசை திருப்ப வேண்டாம், உடனடியாக விபத்து ஏற்படுத்திய போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu