ஆவின் பால் பாக்கெட் பதிலாக பாட்டில்களில் விற்பனை சாத்தியமா? உயர்நீதிமன்ற யோசனை!

ஆவின் பால் பாக்கெட் களுக்கு பதிலாக பாட்டில்களில் விற்பனை செய்யுமாறு உயர்நீதிமன்றம் யோசனை சாத்தியமாகுமா? என்று கேள்வி.

Update: 2023-03-01 12:28 GMT

பல்வேறு தரப்பு மக்கள் ஆவின் நிறுவனத்தின் பால் பாக்கெட் களை பயன்படுத்திவிட்டு குப்பைக்களில் பெருமளவில் தூக்கி போடுகிறார்கள். ஆனால் முன்பு பால் பாக்கெட்களை பயன்படுத்திவிட்டு மீண்டும் திரும்பி ஒப்படைத்தால் ஒரு பாக்கெட்டுக்கு 10 பைசா வழங்கும் திட்டம் முன்பு இருந்தது. ஆனால் தற்போது அவை நடைமுறையில் இல்லை. இதன் காரணமாக அன்றாட பயன்படுத்தும் சுமார் 63 லட்சம் ஆவின்பால் பாக்கெட்டுகள் குப்பையில் வந்துவிடுகிறது. இவ்வாறு சேரும் பிளாஸ்டிக் பெரிய அளவில் சுகாதாரத்தை சீர் கெடுப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒரு ஆலோசனை முன்வைக்கப்பட்டு இருந்தது.


அதாவது ஆவின் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக பாட்டில்களில் இல்லாமல் கண்ணாடி பாட்டில்களில் செய்ய முடியுமா? என்று யோசனையை அரசிற்கு தெரிவித்து இருந்தது. குறிப்பாக ஆவின் பாலை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடித்து விற்பனை செய்வதற்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்வது பற்றி ஆராயும் படியும் அரசு தரப்பு வக்கீலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுரை வழங்கி இருந்தார்கள். இதனுடைய முதற்கட்டமாக ஒரு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்ட அங்கு சோதனை அடிப்படையில் கண்ணாடி பாட்டில்களில் ஆவின் பால் விற்பனை செய்வது குறித்து ஆலோசனை தெரிவித்தும் இருந்தார்கள்.


இந்த விசாரணை வருகின்ற எட்டாம் தேதி நீதிமன்றத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு தரப்பில் உள்ள பொதுமக்கள் இவற்றை வரவேற்பு இருக்கிறார்கள். குறிப்பாக பால் பாக்கெட்களில் விற்பனை செய்வதை விட பாட்டில்களில் விற்பனை செய்வது சுகாதாரமானது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால் சிலர் பாக்கேடுகளில் விற்பனை செய்வதுதான் எளிதாக கையாளக் கூடிய வகையில் அமையும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

Input & Image courtesy: Thanthi News

Tags:    

Similar News