சேலத்தில் பிரதமர் வீடு திட்டத்தில் முறைகேடு.. பழைய வீடுகளுக்கு பில்.. 4 அதிகாரிகள் மீது பாய்ந்த வழக்கு.!

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. இதில் மிகவும் நலிவடைந்தவர்கள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

Update: 2021-07-22 11:39 GMT

சேலம் மாவட்டத்தில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் 4 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் சம்பவம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவோருக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மானியம் அளிக்கப்படுகிறது. இதில் மிகவும் நலிவடைந்தவர்கள் மற்றும் குடிசை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இத்திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 


ஆனால் இதில் அதிகாரிகள் மட்டத்தில் பலர் மோசடியில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பயனாளிகளை தேர்வு செய்தது போன்று ஏமாற்றி அவர்களின் பணத்தை அதிகாரிகள் பெற்று செல்வது அதிகரித்துள்ளது. அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 முதல் 2018ம் ஆண்டு வரை பணம் வாங்கிக் கொண்டு ஏற்கனவே வீடுகள் வைத்திருப்போர்களுக்கும், தகுதியற்ற பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது.

இது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீசார், முதற்கட்டமாக சேலம் மாவட்ட குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் ரவிக்குமார், ஜெயந்திமாலா, உதவி பொறியாளர்கள் சரவணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஒரே நாளில் 4 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News