உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கூடங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை! முகமது அலி இறைச்சிக்கடை வழக்கில் ஹைகோர்ட் காட்டிய அதிரடி!

Act against unlicensed slaughter houses

Update: 2021-12-24 04:48 GMT

உரிமம் இல்லாமல் செயல்படும் இறைச்சி கூடங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க தமிழக ஊரக வளர்ச்சித்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தமிழ்நாடு பஞ்சாயத்து (விலங்குகளை வெட்டுவதற்கான இடங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல் அல்லது ஒழுங்குபடுத்துதல்) விதிகள் 1999 கீழ், அதிகாரிகளுக்கும் வழிகாட்டுதல்களை வழங்குமாறு தமிழக ஊரக வளர்ச்சித்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டார்.

மேலும் உரிமம் இல்லாமல் விலங்குகளை வெட்டினால், கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என உத்தரவிட்டார். பொதுமக்களின் நலன்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்று கூறிய அவர், அசுத்தமான சூழல், விலங்குகளின் கழிவு மற்றும் மருத்துவ கழிவுகளின் முறையற்ற மேலாண்மை காரணமாக மக்கள் சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார். சட்டங்கள், விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கவனமாக செயல்படுத்த வேண்டும் என்றார்.

மேலும், சுகாதாரம் என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதால், சுகாதார பிரச்சினைகள் குறித்த புகார்களை உடனடியாக கவனத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி சுப்ரமணியம் கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டம், பனங்கல் கிராமத்தைச் சேர்ந்த வி.பன்னீர்செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே கிராமத்தைச் சேர்ந்த சத் என்ற முகமது அலி என்ற இறைச்சி விற்பனையாளர், உரிமம் இல்லாமல் விலங்குகளை வெட்டுவதாக அவர் குற்றம் சாட்டினார். இது குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார்.


Tags:    

Similar News