அரசு பள்ளி விடுதி அடிப்படை வசதி இல்லை: ஆதிதிராவிட மாணவர்கள் வேதனை!

அரசு பள்ளி ஆதிதிராவிடர் விடுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் கிடையாது என்று மாணவர்கள் வேதனையில் இருக்கிறார்கள்.

Update: 2022-11-24 06:08 GMT

ஆரணி அருகே ஆதி திராவிடர் மாணவர் விடுதி போதிய பராமரிப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதாக அங்குள்ள மாணவர்கள் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ளது தான் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவர் விடுதி. இந்த விடுதியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இது அரசு அதிதிராவிடர் மாணவர் விடுதியில் சுமார் 55 மாணவர்கள் தங்கி அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.


தங்கள் விடுதியில் பயன்பாட்டில் உள்ள கழிவறை குளியலறை அசுத்தம் அடைந்து பாசி படிந்து இருப்பதாக மாணவர்கள் வேதனை தெரிவித்து இருக்கிறார்கள். மேலும் அவர்கள் சொல்வது போல அந்த இடங்கள் காட்சியளிக்கின்றன. கழிவறை மற்றும் குளியல் அறை சுற்றில் உள்ள ஜன்னல்கள் துருப்பிடித்த நிலையில் உள்ளன. அதன் வழியாக பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ பூச்சிகள் அடிக்கடி வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மாணவர்கள் பயத்தில் கூறுகிறார்கள்.


தற்போது குளிர் காலம் தொடங்கி விட்டதால், மாணவர்கள் வழங்க வேண்டிய போர்வைகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் மாணவர்கள் கடும் குளிரில் இரவு நேரங்களில் படித்து தூங்க முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் மாணவர்களுக்கு சமைக்கப்படும் சமையல் அறை சுத்தம் இல்லாமல் இருப்பதாகவும் விடுதியில் கேஸ் அடுப்பு இல்லாததால் விறகுகள் கொண்டுதான் சமைக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் இருப்பதாகவும் கூறுகிறார்கள். எனவே விடுதிக்கு வழங்கப்படும் கேஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ஆனால் தங்கள் விடுதிக்கு வழங்க வேண்டிய கேஸ் எங்கே போகிறது என்று தெரியவில்லை? என அங்கு பயிலும் மாணவர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News