தி.மு.க. அரசின் பொய் வழக்கு ! அ.தி.மு.க. தலைவர்கள் ஆளுநரிடம் சந்திப்பு!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு பின்னர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.;

Update: 2021-08-19 08:34 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுக்கச் செல்லும் கொடநாடு எஸ்டேட்டில், அவரது மறைவுக்கு பின்னர் கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மேலும், இது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சயான் ஜாமினில் வெளியே இருந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகி பரபரப்பான வாக்கு மூலம் அளித்தார். அப்போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை போன சில முக்கிய ஆவணங்களை அளித்ததாக அவர் போலீசாரிடம் கூறியதாக தெரிகிறது.

இது குறித்த தகவல் நேற்று பத்திரிகைகளில் வெளியான நிலையில், சட்டசபை தொடங்கியதும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொள்ளை சம்பவம் குறத்து பேச முயன்றார். ஆனால் சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர். இதனால் அனைவரும் வெளியேற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதன் பின்னர் எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியில், திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். கொடநாடு வழக்கில் எனது பெயரை சேர்ப்பதற்கு சதி செய்து வருகின்றனர் என திமுக அரசு மீது குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், இன்று அதிமுக தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, கே.பி.முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து மனு அளித்தனர்.

அப்போது திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். ஆளுநர் அடுத்த கட்ட நடவடிக்கையை பொறுத்து தமிழக அரசியலில் என்ன மாதிரியான தாக்கம் ஏற்படும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.

Source: Maalaimalar

Image Courtesy:One India Tamil

https://www.maalaimalar.com/news/topnews/2021/08/19112754/2931623/Tamil-news-ADMK-Leaders-met-governor-banwarilal-purohit.vpf

Tags:    

Similar News