வேலூர்: பாலாற்றில் கரைபுரண்டோடிய வெள்ளத்தில் மூழ்கிய அம்மன் கோயில்!

வேலூர் அருகே பூட்டுத்தாக்கு பாலாற்றில் மழை வெள்ளம் கரைபுண்டோடியதால் அருகில் உள்ள அம்மன் கோயில் மூழ்கியுள்ளது.

Update: 2021-10-17 10:44 GMT

வேலூர் அருகே பூட்டுத்தாக்கு பாலாற்றில் மழை வெள்ளம் கரைபுண்டோடியதால் அருகில் உள்ள அம்மன் கோயில் மூழ்கியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதே போன்று அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகாவிலும் மழை பெய்து வருகிற நிலையில் பல அணைகள் நிரம்பி வருகிறது.அதே சமயம் திருப்பத்தூர் மாவட்டம் ஆரம்பித்து வேலூர் மாவட்டம் வழியாக ராணிப்பேட்டை காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் கடலில் கலக்கிறது பாலாறு. கடந்த சில ஆண்டுகளாக வறண்டு போன பாலாற்றில் தற்போது வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

தொடர்ந்து வேலூர் பகுதியிலும் மழை பெய்து வருவதால், மோர்தானா அணையம் நிரம்பியதால் வேலூரில் ஓடும் பாலாற்றில் இரண்டு கரைகளையும் தொட்டபடி மழை வெள்ளம் செல்கிறது. அதே போன்று பூட்டுதாக்கு பகுதியில் பாலாற்றங்கரையோரம் அமைந்துள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் பாலாற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனை அப்பகுதி மக்கள் அதிசயமாக பார்த்து செல்கின்றனர்.

Source, Image Courtesy: Dinakaran



Tags:    

Similar News