அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - போலீசாரிடம் வாக்குவாதம் செய்த தி.மு.க பிரமுகர்!

அண்ணா சிலை அவமதிப்பு விவகாரம் தொடர்பாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வாக்குவாதம் செய்த தி.மு.க பிரமுகர்.

Update: 2022-10-08 04:59 GMT

விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிஞர் அண்ணாவின் சிலைகளை சிலர் அவமதிப்பு செய்தார்கள். இது தொடர்பாக போல சிலையத்தில் புகார் ஒன்றும் கொடுக்கப்பட்டது. மேலும் மூன்று பெயரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்த விடுவதாக தி.மு.கவைச் சேர்ந்த கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் ஒருவர் வளவனூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ ஒன்று.


தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அண்ணாவின் சிலையை அவமதித்தவர்களை விடுவிப்பதற்கான காரணம் என்ன? நாங்கள் ஆளும் கட்சியில் என்பதால் அமைதியாக இருங்கள் சர்வதிகாரமாக நடக்கிறது என்று அவரிடம் பேசினார். அதற்கு அங்கிருந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைதியாக பேசும் படியும் கூறினார். அதற்கு நீ யார்? என்று பிரமுகர் பேசியுள்ளார்.


மேலும் அவருடன் வந்த தி.மு.கவினர் அங்கிருந்த போலீசாரிடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கும் வீடியோ காட்சிகள் தற்போது பதிவாகியுள்ளன. இந்த ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறது.

Input and Image courtesy: News

Tags:    

Similar News