சொன்னதை செய்பவர் அண்ணாமலை: 95 பேருக்கு ₹.11,490 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகள்!

95 பேருக்கு ₹. 11,490 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை மாற்றி கொடுத்து விட்டார் அண்ணாமலை.

Update: 2022-12-27 03:17 GMT

டாஸ்மார்க் கடைகளில் அதிக விலைக்கு மது விற்பவர்கள் தி.மு.கவினர், அட்டைப்பூச்சி போல மக்கள் பணத்தை உறிஞ்சுகிறார்கள் என்று பா.ஜ.க பொது செயலாளர் முருகானந்தம் தெரிவித்து இருக்கிறார். கோவை தெற்கு மாவட்ட பா.ஜ.க கட்சி சார்பில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98 வது பிறந்தநாள் விழாவில் பொள்ளாச்சி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்த ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பார்வையாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாநில பொது செயலாளர் முருகானந்தம் 95 பேருக்கு ₹ 11,490 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை வழங்கினார்.


மேலும் 11 பேருக்கு செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தி அதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. மேலும் மாநில பொது செயலாளர் இது பற்றி கூறுகையில், கடந்த 11-ம் தேதி பா.ஜ.க லயன்ஸ் கிளப் சார்பில் காது கேட்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் கிளப்பின் நிர்வாகிகள் கூறிய தகவலை கேட்டு பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பத்தாயிரம் ரூபாய் மதிப்பிலான கருவியை இலவசமாக லயன்ஸ் கிளப் வழங்கி உள்ளது என குறிப்பிட்டார்.


ஆனால் அந்த கருவியின் விலை என்ன என்பது பின்னர் தான் அவருக்கு தெரிய வந்தது. தகவல் தொடர்பில் ஏற்பட்ட குழப்பத்தினால் தான் இது ஏற்பட்டது என்று அந்த அமைப்பில் இருந்து தெளிவான தகவல் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டார்கள். மேலும் அண்ணாமலை பேசக்கூடாது என்பதற்காக பொய்யான குற்றச்சாட்டுகளை தி.மு.கவினர் தெரிவித்து வருகிறார்கள். பா.ஜ.கவின் வளர்ச்சியை தி.மு.கவினால் இருக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: News

Tags:    

Similar News