அவதூறு பரப்புவர்களுக்கு பதில் அளித்து நேரம் வீணாக்காதீர்கள் - அண்ணாமலை கூறியதன் பின்னணி என்ன?
அவதூறு பரப்புவர்களுக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று பா.ஜ.க தலைவர் வலியுறுத்தல்.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். குறிப்பாக அந்த அறிக்கையில் கூறுகையில், பலரின் தியாகங்களும் பலரின் அயராத உழைப்பினாலும் வளர்ந்த கட்சி நமது கட்சி என்று குறிப்பிட்டு இருக்கிறார். விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அவதூறான அவதூறான விமர்சனங்களை ஒதுக்கி தள்ளுங்கள். சமீப காலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர, சகோதரிகளும், தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்ப்பினையாற்றி வருவதாகவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் கட்சித் தொண்டர்களும் தன் ஆர்வலர்களும் வலைதளங்களில் எதிர் வினையாடும் பொழுது கவனமாக இருக்க வேண்டிய அவசரத்தையும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்று நான் சொல்லவில்லை. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பது காட்டிலும் கடந்து செல்வதே சிறந்தது என்று தான் கூறுகிறேன். மக்கள் பணியில் நாட்டம் கொண்டு பா.ஜ.க வளர்ச்சிக்காக இயராது உழைத்து வரும் நீங்கள், நம் கட்சியின் உறுப்பினர்களுக்காகவோ எதிர்க்கட்சியின் விமர்சனங்களுக்காகவோ அல்லது சில சமூக வலைதள பரப்புவாளர்களுக்கு செவி சாய்க்காமல் உங்கள் தொகுதிகள் நம் கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றுங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
உங்கள் கருத்தை நீங்கள் வைக்க முன் வைக்காதீர்கள். பகிரங்கமாக உங்கள் கருத்தை முன் வையுங்கள். அதேசமயம் பரப்புரை பரப்புவதை முழு நேரமாகக் கொண்டு பணியாற்றும் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லுங்கள் என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
Input & Image courtesy: Maalaimalar