நீட் தேர்வை அரசியலாக்கிய தி.மு.கவிற்கு இது பாடம்... தொடரும் வெற்றிகள்.. அண்ணாமலையின் நச் பதில்..
தமிழக மாணவர் முதல் முறையாக நீட் தேர்வில் 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார்..
தமிழ்நாட்டை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் முதல் முறையாக நீட் தேர்வை எழுதி 720க்கு 720 மதிப்பெண்களை எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்து உள்ளார். தமிழகத்தின் முதல் முறையாக இந்த மாணவன் முழு மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து இருக்கிறார். குறிப்பாக நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக மற்றும் சில எதிர்க்கட்சிகள் கோஷம் எழுப்பி வருகிறது. ஆனால் நீட் தேர்வினால் எங்களால் வெற்றி பெற முடியும் என்பதை தமிழக மாணவ மாணவிகள் நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது தேசிய அளவில் முதலிடம் பிடித்து தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் அசத்து இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் தேர்வு வெற்றி பெற்ற மாணவர் இத்தகைய NEET தேர்வுகள் மாணவர்களை ஊக்குவிக்க தான் செய்கின்றது என்று பேட்டியும் அளித்து இருக்கிறார். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டு இருக்கிறார் இது பற்றி அவர் கூறும் பொழுது, நீட் தேர்வின் முடிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 மாணவர்கள் தேசிய அளவில் முதல் 10 இடங்களுக்குள் வந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவ படிப்பில் அனைவருக்கும் சம வாய்ப்பை உருவாக்கிய நீட் தேர்வை அரசியலாக்கிய திமுகவிற்கு இன்று வெளியான தேர்வு முடிவுகள் தகுந்த பாடத்தைக் கற்பிக்கும் என்று நம்புவோம் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தன்னுடைய கருத்தை பதிவு செய்து இருக்கிறார்.
Input & Image courtesy: News