நெருங்கி வரும் புயல்.. சென்னை புறநகர் ரயிலும் ரத்து..!

நெருங்கி வரும் புயல்.. சென்னை புறநகர் ரயிலும் ரத்து..!

Update: 2020-11-24 17:24 GMT

‘நிவர்’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் தமிழகம் முழுவதும் நாளை பொது விடுமுறை அறிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இந்நிலையில், புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயலை எதிர்கொள்ள அனைத்து கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு தயார் நிலையில் வைத்துள்ளது. மேலும், பாதிப்பு அதிகமாக ஏற்படக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வைக்கப்பட்டுள்ளனர்.


சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால், அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, சென்னையில் 5 மீட்புப்படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாளை மாலை அதிதீவிர புயலாக மாறி நிவர் புயல் கரையை கடக்கிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரயில் சேவைகளும், பேருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.


இந்நிலையில் நிவர் புயலால் நாளை காலை 10 மணி முதல் சென்னை புறநகர் ரயில்களும் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை ரயில்கள் இயங்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News