பொறியியல் மாணவர்களுக்கு மறுதேர்வு எப்போது.. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.

Update: 2021-06-10 12:35 GMT

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனிடையே செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டது.

இதனிடையே தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை கடந்த ஒரு சில மாதங்களாக தாக்கி வருகிறது. இதனால் இந்த வருடமும் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த முறையை போன்று தேர்வுகளை ஆன்லைன் வாயிலாக நடத்துவதற்கு பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டது. அதன்படி ஒரு சில பல்கலைக்கழகங்களில் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற ஜூன் 14ம் தேதி முதல் நடைபெறுவதாக இருந்த செமஸ்டர் தேர்வுகள் 21ம் தேதி முதல் நடைபெறுகிறது. மேலும், அரியர் மாணவர்களுக்கான தேர்வு ஜூலை மாதம் 17ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி பல்கலைக்கழகம் இணையதளங்களில் தெரிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News