எதிர்க்கட்சி மீது பழி போட்டு தப்பிக்கும் தி.மு.க: ஆவின் பால் பிரச்சனைக்கு தீர்வு எப்பொழுது?

ஆவின் பால் பிரச்சனைக்கு எதிர்க்கட்சியின் மீது பழி போட்டுக்கொண்டு தன்னை காப்பாற்றிக் கொள்கிறது தி.மு.க.

Update: 2023-03-19 02:02 GMT

எதிர்க்கட்சி மேல் பழி போட்டு ஆவின் பால் பிரச்சனையை தமிழக அரசு தனக்கு ஏற்றார் போல் சாதகமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக எதிர்க்கட்சியின் மீது இத்தகைய பழிகளை போடாமல் உடனடியாக அரசு அதற்கு தீர்வு காண வேண்டும் என்று தே.மு.தி க பொருளாளர் பிரேமலதா அவர்கள் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் பத்திரிக்கையாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியின் போது கூறுகையில், ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சியின் மீது பழியை போடாமல் தமிழக அரசு தான் அங்கு உரிய பிரச்சனையை தீர்க்க வேண்டும்.


ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் போது பல்வேறு கட்சிகள் பயந்து போது தே.மு.தி.க தைரியமாக போட்டியிட்டது. தி.மு.க நிர்வாகிகளை போலீஸ் ஸ்டேஷன் புகுந்து அடித்து நொறுக்குவது மிகவும் துரதிஷ்டவசமான சம்பவமாக கருதப்படுகிறது. சொந்த கட்சி எம்.பி வீட்டையே தாக்குவது தான் தங்களுடைய திராவிட மாடலா என்றும், அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். பல அமைச்சர்களின் நடவடிக்கைகள் தற்பொழுது மக்கள் முகம் சுளிக்கும் வகையில் அமைந்து இருக்கிறது.


பொது இடங்களில் அமைச்சர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அவர்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.. மறைமுகமாக அவர் அமைச்சர் பொன்முடியை தான் கூறுவதாக இங்கு தெரிகிறது. அ.தி.மு.க பிளவுபட்டு இருப்பது கட்சியை பலப்படுத்தும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.கவை வீழ்த்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

Input & Image courtesy: Dinamalar

Tags:    

Similar News