மீண்டும் வேகம் எடுக்கும் கொரோனா... மக்களே உஷார்... மத்திய சுகாதாரம் துறை எச்சரிக்கை!

இந்தியாவில் தற்பொழுது அதிகரிக்கும் கொரோன பரவல் காரணமாக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Update: 2023-04-05 01:15 GMT

உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் காரணமாக பெருமளவில் தாக்கம் ஏற்பட்டு இருக்கிறத. குறிப்பாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பல்வேறு மக்கள் உலக அளவில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்து இருக்கிறார்கள். இந்தியாவிலும் இதன் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கொரோனா தாக்களின் போது அதிகமான பாதிப்பை எதிர்கொண்டது.


தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதன் பிறகு அனைவருக்கும் கிடைக்கும் படி மத்திய அரசு மிக விரைவாக செயல்பட்டு கொரோனா பரவலை தடுத்தது. அந்த வகையில் தற்பொழுது நாடு முழுவதும் மெல்ல, மெல்ல இதனுடைய பாதிப்பு அதிகரித்து வருகிறது. அபாய அளவில் இல்லை என்றாலும், விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அரசாங்கம் தற்போது தெரிவித்து இருக்கிறது. இதற்காக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்பொழுது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.


இது ஒரு எச்சரிக்கை அல்ல., ஆனால் விழிப்புணர்வுடன் இருப்பதற்கான ஒரு அறிவுரை ஆகும். குறிப்பாக நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோர் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இந்தியா முழுவதும் 11 பேர் ஒரே நாளில் பலியாகி இருக்கிறார்கள். எனவே கவனமாக இருங்கள் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy: News

Tags:    

Similar News