நாகை மாவட்டத்தில் பா.ஜ.க நிர்வாகி காருக்கு தீ வைப்பு! தமிழகத்தில் பா.ஜ.க'வினர் மீது தொடரும் தாக்குதல்கள்!

Update: 2022-02-11 07:37 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத்தலைவரது நான்கு சக்கர வாகனம் தீ வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நேற்று, தமிழக பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. தி.மு.க ஆட்சியில் பா.ஜ.க மீதான தாக்குதல்கள் எல்லை மீறுவதாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க, நேற்று முன்தினம் இரவு நாகைப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில், பா.ஜ.க இளைஞரணி மாவட்ட துணைத்தலைவர் 'புவனேஸ்வரர் ராம்' என்பவரது நான்கு சக்கர  வாகனம் தீ வைக்கப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் தீ வைக்கப்பட்டதால், வாகனத்தின் இடது பக்க கதவு மற்றும்  இடது பக்க டயர் ஆகியவை தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து புவனேஸ்வரர் ராம் கீழையூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, காவல் நிலைய அதிகாரிகள் மோப்ப நாயுடன் வந்து சம்பவ இடத்தை சோதனையிட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக பா.ஜ.க மீது நடத்தப்படும் தாக்குதல்களின் பின்னணியை காவல்துறை நேர்மையோடு விசாரிக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவுள்ளது.

Hindu Tamil

Tags:    

Similar News