தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் - ஆணையத்தின் கருத்திற்கு அண்ணாமலை கண்டனம்!
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் ரஜினிகாந்த் மீதான ஆணையத்தின் கருத்திருக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்து வருகிறார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சுகாரத்தில் ரஜினிகாந்த் பா.ஜ.க மாநில செயல் தலைவர் அண்ணாமலை அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் இது பற்றி பேசுகையில், தி.மு.க அரசு தாய்மொழிக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்து வருகின்றது. இதனை கண்டித்து வருகின்ற 27ஆம் தேதி பா.ஜ.க சார்பில் போராட்டம் நடந்துள்ளது. தி.மு.க அரசு தாய்மொழியை வைத்து வியாபாரம் செய்து ஆறு முறை ஆட்சிக்கு வந்திருக்கிறது. நம்முடைய தாய்மொழியை வளர்ப்பதற்கு என்ன செய்கிறார்கள்? என்று பார்த்தால் எதுவும் கிடையாது. ஆனால் இந்தி மொழியை ஒரு பூதமாக வைத்து அரசியல் செய்கிறார்கள். மத்திய பிரதேசம் மருத்துவ படிப்பு இந்தியில் கொடுத்ததாக சொல்கிறார்கள், அதை எதிர்க்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதை மருத்துவக் கல்வி முதலாம் ஆண்டு படிப்பை தமிழில் கொடுக்க முடியுமா? எட்டு பிராந்திய மொழிகளில் இன்ஜினியரிங் பாடத்திட்டங்கள் இருக்கிறது. இந்தியாவில் அதிகமான இன்ஜினியர்களை உருவாக்கக்கூடிய தமிழ்நாட்டில் தமிழ் பாடத்திட்டம் இருக்கிறதா?
இந்தி திணிப்பு நடந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் தி.மு.க கூட்டணியில் அப்பொழுது இருந்ததும் முதல் மற்றும் இரண்டாவது கல்விக் கொள்கையில் மூன்றாம் கல்வி மூன்றாவது மொழி இந்தி கட்டாயம் என இருந்தது. இதற்கெல்லாம் பதில் சொல்ல மறுக்கிறார்கள். 2019 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் குழுவில் தான் இந்து என்ற வார்த்தை எடுத்து விட்டு தங்களுக்கு பிடித்த மொழியை படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிபதி அருணா ஜெகதீசன் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அறிக்கை கொடுத்து இருக்கிறார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்கு காரணமானவர்கள் யார்? என்பதற்கு தெளிவான முடிவு அதில் இல்லை.
ஒரு பக்கம் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்கிறது, துறை சார்ந்த நடவடிக்கைகளுக்கு பரிந்துரை இருப்பதை பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது. காரணம் இதில் காவல் துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் ஏன்? டி.ஜி.பி பெயர் இல்லை. ரஜினிகாந்த் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்தார். அதற்கு சாட்சி கேட்கிறார்கள் மு.க ஸ்டாலின் கனிமொழி திருமாவளவன் சீமான் ஆகியோர் கருத்து சொல்லவில்லையா? ஆகவே ரஜினிகாந்த் பற்றி சொல்லிய கருத்தை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது என்று கூறியிருக்கிறார்.
Input & Image courtesy: News