கனிமவளக்கொள்ளை பணம் எங்கே போகிறது? உண்மையைப் போட்டு உடைத்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை!
கனிமவளக் கொள்ளை பணம் கோபாலபுரத்திற்கு தான் போகிறது என்று பா.ஜ க தலைவர் அண்ணாமலை அவர்களின் குற்றம் சாட்டி இருக்கிறார்.
கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்த 20 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் 21 வது நாள் பா.ஜ.க களம் இறங்கும் என்று, பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசி இருக்கிறார். தமிழகத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு கனிம வளம் கடத்தப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது அதனை கண்டித்து பா.ஜ.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அரசம்பாளையம் என்ற பிரிவில் நடைபெற்று வந்தது.
அதில் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள் பேசுகையில், கடந்த 1900 ஆம் ஆண்டு கேரள மாநிலம் நெல்லை பள்ளியில் பூகம்பம் ஏற்பட்டபோது 9000 பேர் இறந்தனர். சுதந்திரம் கிடைத்த பின் 75 ஆண்டுகளில் குவாரிகளில் 60 முதல் 70 அடி தான் தோன்றியிருந்தோம். ஆனால் தி.மு.க ஆட்சிக்கு பிறகு இரண்டு ஆண்டுகளில் 150 முதல் 220 அடி வரை குவாரிகளை தோண்டி உள்ளார்கள். இதன் பாதிப்பு 10 மற்றும் 30 ஆண்டுகளுக்கு பின் தான் தெரியும் என்று கூறி இருக்கிறார். தமிழக அரசு வரி உள்ளிட்டவை வாயிலாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்து இருக்கிறது. அதில் கனிம வளத்தின் வாயிலாக 900 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக கூறப்படுகிறது. இதிலிருந்து கனிம வள கொள்ளையை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு லாரியில் 12 யூனிட் எடுத்து செல்லப்படுகிறது என்றால், சுமார் மூன்று நான்கு யூனிட் மட்டுமே அரசிற்கு கணக்கு காட்டப்படும்.
அத்துமீறி எடுத்து செல்லப்படும் ஒரு ரூபாய் கூட வருவாயில் இல்லை. தனியார் பினாமிகள் மற்றும் குவாரி மேலாளர் நியமித்து ஒரு யூனிட்டுக்கு 400 ரூபாய் என்று விற்க்கிறார்கள் என பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். தி.மு.க ஆட்சிக்கு வந்த வந்து 22 மாதங்கள் ஆகிறது, ஆனால் தற்பொழுது அதிக அளவில் கொள்ளைகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: Dinamalar