'சாதாரண குடும்பத்தில் பிறந்தாலும் நாட்டுக்காக உழைத்தால் பா.ஜ.க'வில் அங்கீகாரம் உண்டு என்பதற்கு நான் உதாரணம்' - பெருமையுடன் கூறும் வானதி சீனிவாசன்

பாரதிய ஜனதா உயர்மட்டக் குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் பெண் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் வானதி சீனிவாசன்.

Update: 2022-08-19 01:52 GMT

பாரதிய ஜனதா கட்சியில் அதிக பட்ச அங்கீகாரத்தை கொண்ட அமைப்பாக ஆட்சி மன்ற குழு திகழ்கின்றது. இந்த ஆட்சி மன்ற குழு தலைவர்கள் மற்றும் முதலமைச்சர்களை தேர்வு செய்வது கட்சி அளவிலான முக்கிய முடிவுகளை எடுப்பது என அனைத்திலும் இந்த குழு உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி இந்த ஆட்சி மன்ற குழு நபர்களை மாற்றி அமைத்துள்ளது. இந்தக் குழுவில் தேசியத்தலைவர் ஜேபி நட்டா பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரும் குழுவில் நீடிக்கிறார்கள். மேலும் இதுவரை பி.எஸ் எடியூரப்பா சர்பானந்தா, லக்ஷ்மணன், இக்பால் சிங் லால்புரா, சுதா யாதவ் மற்றும் சத்யநாராயண் ஜாதியா ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். 


ஆட்சி மன்ற குழுவை போல பா.ஜ.கவின் மத்திய தேர்தல் குழுவும் தற்போது மாற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஜே. பி. நட்டா தலைமையிலான 15 பேர் கொண்ட குழுவில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அமித் ஷா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வானதி சீனிவாசன் ஆகியோரும் இடம் பெற்றுள்ளார்கள். மேலும் இது குறித்து வானதி சீனிவாசன் அவர்கள் கூறுகையில், "இந்த குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழ் பெண் என்ற பெருமை மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் சாதாரண பின்னணியை கொண்ட கட்சி மற்றும் நாட்டுக்காக பாடுபட்ட காரணத்தினால் பா.ஜ.க என்னை ஆதரித்துள்ளது. 


எந்த ஒரு சாதாரண நபரும் எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல், கட்சிக்காக மற்றும் நாட்டு மக்களுக்காக பாடுபடுபவர்களுக்கு பா.ஜ.க உரிய அங்கீகாரம் கொடுக்கும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் கட்சி வலுவாக இல்லாத காரணம் இருந்தும் இந்த ஒரு காரணத்திற்காக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதற்கு என்னுடைய சார்பிலும் தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நன்றியை சமர்ப்பிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார். 

Input & Image courtesy: News 18

Tags:    

Similar News