"முத்தலாக் தடை சட்டத்தால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு!"- பா.ஜ.க'வில் இணைந்த சாத்தூர் நகராட்சி இஸ்லாமிய பெண் வேட்பாளர் நம்பிக்கை!

Update: 2022-02-11 06:14 GMT

சாத்தூரைச்  சேர்ந்த 25 வயதுடைய "பர்வீன்" என்ற இஸ்லாமிய பெண், பா.ஜ.க சார்பாக சாத்தூர் நகராட்சி 21 'வது வார்டில் போட்டியிடுகிறார்.  


தமிழகத்தில் பா.ஜ.க சீரான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. பிரதமர்  நரேந்திர மோடியின் நலத்திட்டங்கள் தமிழக மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருவதால், அவரது நற்பெயரும் பா.ஜ.க'வின்  நற்பெயரும் அதிவேகத்தில் தமிழக மக்களிடம் வளர்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல், தமிழகத்தில் திராவிட இயக்கங்களால் கட்டமைக்கப்பட்ட பொய் பிம்பங்களை தனது அரசியல் ஆளுமை மூலம் உடைத்து  வருகிறார் அண்ணாமலை. அந்த வரிசையில் பா.ஜ.க சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற பிம்பம் பெரிய அளவில் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு கடந்த சில காலமாக பா.ஜ.க, தமிழகத்தில் திராவிட இயக்கங்களால் உருவாக்கப்பட்ட  பொய்யுரைகளை  முறியடித்து, மக்களிடம் உண்மையை சென்று சேர வைத்து வருகிறது.

இவ்வரிசையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் நகராட்சியில்  நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 21 'வது வார்டில் பா.ஜ.க சார்பாக  இஸ்லாமிய பெண் "பர்வீன்" போட்டியிடுகிறார்.


பா.ஜ.க'வில் இணைந்த பர்வீன் கூறியதாவது : முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்து இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தது மத்திய பா.ஜ.க அரசு. சிறுவர்,, சிறுமிகள் மற்றும்  பெண்கள் மீதான துன்புறுத்தல்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் அதை மத்திய பாஜக அரசு செய்யும் என்ற நம்பிக்கையுடன் இக்காட்சியில் இணைந்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

Hindu Tamil



Tags:    

Similar News