கோவில் நிலம் ஆக்கிரமிப்பு-களத்தில் இறங்கிய இந்து முன்னணி!

கோவிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மர்மநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாகவும் எனவே ஆக்கிரமைப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும்.

Update: 2021-08-19 23:44 GMT

புதுச்சேரியில் கோவில் நிலத்தை சமூக விரோதிகள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமைப்பு செய்து வைத்துள்ளாதகவும் ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுச்சேரியில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் காமாட்சி அம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை மர்மநபர்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருவதாகவும் எனவே ஆக்கிரமைப்பாளர்களிடம் இருந்து கோவில் சொத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் கோவில் சொத்தை ஆக்கிரமிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுவை பிரதேச விஸ்வகர்மா சமூக கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ண ஆச்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விஸ்வகர்மா சமூக சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் சுப்பிரமணிய ஆச்சாரி மற்றும் புதுச்சேரி இந்து முன்னணி மாநில தலைவர் சனில் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சி செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Source: Hindumunnani 

Tags:    

Similar News