இனி பயிர்க்காப்பீடு கிடையாது - டெல்டா விவசாயிகள் வயிற்றில் அடித்த 'விடியல்' தி.மு.க அரசு !

Breaking News.

Update: 2021-08-22 06:45 GMT

நெற்பயிர்களுக்கு பயிர்க்காப்பீடு கிடையாது என தி.மு.க அரசு அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பயிர்க் காப்பீடு தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தி.மு.க அரசு, 2021-2022-ம் ஆண்டில் நெல் மற்றும் தட்டைப் பயறு தவிர மக்காச்சோளம், உளுந்து, துவரை, பச்சைப் பயறு, சோளம், கம்பு, ராகி, நிலக்கடலை, எள், கொள்ளு, பருத்தி, சாமை, வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு மட்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை காப்பீடு செய்யலாம் என அறிவித்துள்ளது. இதனால் நெல், தட்டைப்பயறு அதிகம் பயிர்விக்கும் டெல்டா விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பையும், அதிருப்தியையும் கிளப்பியுள்ளது.


ஆண்டுதோறும் குறுவை நெல் சாகுபடிக்கான பயிர்க் காப்பீடு திட்டம் குறித்த அறிவிப்பு ஜூன் மாதமே வெளியாகிவிடும். குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் ப்ரீமியம் செலுத்துமாறு தமிழக வேளாண்மைத்துறை, பயிர் காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிப்புகள் வெளியாகி விடும், ஆனால் இந்த ஆண்டு ஜூலை கடைசி வாரம் நெருங்கிய பிறகும் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகததால் விவசாயிகள் கவலை அடைந்தார்கள். குறுவை நெற்பயிர்களில், இயற்கை இடர்பாடுகளால் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டு மகசூல் இழப்பு உருவானால், இழப்பீடு கிடைக்க வாய்ப்பில்லாமல் போய்விடும் எனக் கவலை தெரிவித்திருந்தார்கள்.

காரணம், காவிரியை நம்பி மட்டுமே விவசாயம் செய்யும் டெல்டா விவசாயிகளுக்கு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மழைக்காலம் பெரும் அவஸ்தையாகும், சற்று அதிக அளவில் மழை பெய்தால் சமதளப்பகுதியான டெல்டாவில் தண்ணீரே வடிய வைக்க இயலாது. இதனால் தண்ணீர் நின்று பயிர்கள் அழுகி விடும். இந்த இக்கட்டான சூழலில் கடன் வாங்கி விவசாயம் செய்யும் பல விவசாயிகளை சிறிதளவேனும் இழப்பீட்டு தொகையே காப்பாற்றும். விவசாயத்தில் பெரிதாக லாபம் இல்லை என்றாலும் இழப்பீட்டு தொகை விவசாயியை கடனாளியாக்காமல் காப்பாற்றும். இந்த ஒரு நிலையில்தான் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் விதமாக தி.மு.க அரசு இழப்பீட்டு தொகையை நெற்பயிருக்கு கிடையாது என்ற அறிவிப்பின் மூலம் வயிற்றில் அடித்துள்ளது.


'விடியல்' என விளம்பரங்கள் செய்து இப்படி விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை தி.மு.க அரசு செய்யும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். சென்னைக்கு அடுத்ததாக தி.மு.க-விற்கு அதிக வெற்றிகள் தந்த டெல்டா பகுதி மக்களுக்கு நல்ல விடியலை தந்துள்ளது தி.மு.க அரசு.

Tags:    

Similar News