தக்காளி தட்டுப்பாடு ! கோயம்பேடு சந்தையில் லாரிகளை அனுமதிக்க முடியுமா? நீதிமன்றம் கேள்வி !
தமிழகத்தில் தக்காளி விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஏழை மக்கள் தக்காளி இல்லாமல் சமையல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கிலோ ரூ.120 முதல் ரூ.150 வரை விற்கப்படுகிறது. இது போன்ற விலையேற்றம் எப்போதும் இல்லை எனவும் வியாபாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்த சென்னை கோயம்பேடு சந்தை தக்காளி மைதானத்தில் லாரிகளை அனுமதிக்க முடியுமா என்று சி.எம்.டி.ஏ மற்றும் மார்கெட் கமிட்டி ஆகியவை வரும் 29ம் தேதி (திங்கட்கிழமை) விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், தக்காளி தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வினை கருத்தில் கொண்டு சிறு வியாபாரிகள் இணைந்து தக்காளி மைதானத்தில் வாகனத்தை நிறுத்தி தக்காளி விற்பனையை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Puthiyathalamurai