பால் தரத்தை சோதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
பாலின் தரப்பில் சோதிக்கும் நடைமுறையை தமிழக அரசு ஏற்படுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு.
பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பாலின் தரத்தை மாவட்ட அளவில் பரிசோதிக்கும் புதிய நடைமுறையை விரைந்து அமல்படுதத் வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. பால் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக கொண்டு வரும்போது பாலின் தரம் மற்றும் அளவில் அவற்றின் அளவின் அடிப்படையில் பாலுக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.
பால் கொண்டு செல்வதில் முறைகேடுகள் நடப்பதாகவும், அவற்றை தடுக்கவும், தரத்தை பரிசோதக்கவும், வெளிப்படையான நடைமுறையை பரிந்துரைக்கும் படி ஒரு குழுவை அமைத்தது உயர்நீதிமன்றம். அந்த குழு அளித்த பரிந்துரையின் படி சோதனை மேற்கொண்டு தான் பால் உற்பத்தியாளர்களுக்கு மின்னலும் முறையில் தகவல்கள் வழங்கி உரிய தொகை புதிய தொழில்நுட்பம் முறையில் செலுத்தப்பட வேண்டும் என்று பால் உற்பத்தி மற்றும் பால் வளத்துறை ஆணையர் 2016 ஆம் ஆண்டு அறிவித்தார். இந்த நடைமுறை கடந்த ஆறு ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை.
மாவட்ட அளவில் பாலின் தரம் மற்றும் பரிசோதிக்கப்பட்ட அவற்றுக்கான விலை வழங்க வேண்டும் என்று பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்தும் அந்த கூட்டுறவு சங்கங்கள் மூலமாக தினம் தோறும் பால் தரத்தை அடிப்படையாகக் கொண்டு விளக்கம் விலையை வழங்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் நல சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு தான் தற்போது வெளியாகி பாலின் தரத்தை அந்தந்த மாநிலங்களையும் பரிசோதிக்கும் நடைமுறையை தமிழக அரசு விரைவில் தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
Input & Image courtesy: News