செங்கல்பட்டில் 5 மாணவர்கள், 2 ஆசிரியர்களுக்கு கொரோனா !

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-07 03:54 GMT

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 மாணவர்கள் மற்றும் 2 ஆசிரியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாவட்டத்தில் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் சற்று குறைந்து வரும் நிலையில், பல்வேறு தளர்வுகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்தது. அதன்படி கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. வகுப்பறைக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சோதனைக்கு உட்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் தொழுப்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்ற மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று வல்லிபுரம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி படித்த ஒரு மாணவிக்கும், செம்பாக்கம் மேல்நிலைப் பள்ளியில் படித்த 2 மாணவர்களுக்கும், மாமல்லபுரம் மேல்நிலைப் பள்ளியில் படித்த ஒரு மாணவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மதுராந்தகத்தில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியாகி வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News