35 மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள்: பொது மக்களின் வரிப்பணத்தில் மாதம் ரூ.12 லட்சம் ஊதியமாக வழங்கும் தமிழக அரசு!

Update: 2022-07-02 10:37 GMT

சென்னை நகரில் செயல்பட்டு வரும் அரசு பள்ளி ஒன்றில் 35 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் நிலையில் அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுப்பதற்கு சுமார் 9 ஆசிரியர்கள் இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. அதன்படி 9 ஆசிரியர்கள் மற்றும் 2 ஊழியர்களின் ஊதியத்திற்காக மாதம் தோறும் மக்கள் வரிப்பணத்தில் ரூ.12 லட்சத்தை தமிழக அரசு செலவு செய்து வருவது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வரும் நிலையில், சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள எழும்பூர் அரசு அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளியில் 34 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். அவர்களுக்கு என்று 9 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத 2 ஊழியர்கள் என மொத்தம் 11 பேர் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் சம்பளமாக மாதம் ரூ.12 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்கி வருகிறது.

பல அரசு பள்ளிகளில் அதிகமான மாணவர்கள் இருந்தும் அவர்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில், குறைந்த அளவிலான மாணவர்களுக்கு 9 ஆசிரியர்கள் பணியாற்றி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இவர் போதுமான வேலை இல்லாமல் ஒரே பள்ளியில் அமைதியாக தங்களின் காலத்தை கழித்து வருவது அம்பலமாகியுள்ளது. எனவே இவர்களை உடனடியாக அதிகமான மாணவர்கள் இருக்கும் பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Source, Image Courtesy: News 18 Tamilnadu

Tags:    

Similar News