குடியரசுத் தலைவர் வருகை, சென்னையில் குவிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். இதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்டு எடுக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை நடைபெறும் அரங்கிற்கு செல்கிறார்.;

Update: 2021-08-01 05:33 GMT
குடியரசுத் தலைவர் வருகை, சென்னையில் குவிக்கப்பட்ட போலீஸ் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சட்டசபை அரங்கில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உருவப்பட திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இந்த விழா நடைபெறுகிறது. இதில் தலைமை சிறப்பு விருந்தினராக குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைக்கிறார்.  

இந்த விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை காலை 10 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.45 மணிக்கு சென்னை வந்தடைகிறார். இதன் பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் ஓய்டு எடுக்கிறார். அதனைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு சாலை மார்க்கமாக சட்டசபை நடைபெறும் அரங்கிற்கு செல்கிறார்.

இந்நிலையில், குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு போலீஸ் உயர் அதிகாரிகள் தலைமையில் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குடியரசுத்தலைவர் செல்லும் வழி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source: Dailythanthi

Image Courtesy: dailythanthi

https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/01065803/President-Ramnath-Govind-Visit-Chennai-tomorrow-7.vpf

Tags:    

Similar News