சென்னையில் பயங்கர விபத்து.. 5 பட்டதாரி இளைஞர்கள் உயிரிழப்பு!

சென்னையில் லாரி மீது சொகுசு கார் மோதியதில் 5 பொறியியல் பட்டதாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Update: 2021-09-05 06:50 GMT

சென்னையில் லாரி மீது சொகுசு கார் மோதியதில் 5 பொறியியல் பட்டதாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்த 5 பேர் நாளை நடக்கும் நேர்முக தேர்வில் கலந்து கொள்வதற்காக சொகுசு காரில் சென்னைக்கு வந்தனர். அப்போது திகநரில் சில பொருட்களை வாங்கிக்கொண்டு அவர்கள் இரவு 12 மணியளவில் வண்டலூர் நோக்கி சென்றுகொண்டிருந்தனர்.

பெங்களத்தூர் அருகே கார் நிலை தடுமாறி சாலையில் நின்றிருந்த சரக்கு லாரி மீது மோதியது. இதில் லாரிக்கு அடியில் சிக்கி அப்பளம் போன்று நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டு பிரேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

https://www.dinamalar.com/news_detail.asp?id=2838018

Tags:    

Similar News