வாகனங்களுக்கு 5 ஆண்டுகள் காப்பீடு கட்டாயம் !- சென்னை உயர்நீதிமன்றம்!

செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படுகின்ற அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2021-08-26 06:08 GMT

செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படுகின்ற அனைத்து வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கான காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்தில் மரணமடைந்த சடையப்பன் என்பவரின் குடும்பத்தார் இழப்பீடு வேண்டி, ஈரோடு மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சடையப்பன் குடும்பத்திற்கு 14 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதனை எதிர்த்து நியூ இந்திய அஷுரன்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரணை நடத்தினார்.

இரண்டு தரப்பு ஆவணங்கள் மற்றும் வாதங்கள் அடிப்படையில் ஈரோடு தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்தனர். மேலும், வாகனத்தை வாங்குபவர்கள் அது பற்றி ஆர்வத்தை தெரிந்து கொள்கின்றனர். ஆனால் காப்பீடு குறித்த நடைமுறைகளை முழுமையாக தெரிந்து கொள்வதில்லை என நீதிபதி கூறினார்.

மேலும் வருகின்ற செப்டம்பர் 1ம் தேதி முதல் விற்கப்படும் புதிய வாகனங்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Source,Image Courtesy:: Puthiyathalamurai

https://www.puthiyathalaimurai.com/newsview/113911/Chennai-High-Court-orders-compulsory-5-year-insurance-for-vehicles

Tags:    

Similar News