சென்னையில் கனமழை: எந்தெந்த சுரங்கப்பாதைகள், சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது.. போக்குவரத்து காவல் அறிவிப்பு!
சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருவதால் நகரில் பல சுரங்கப்பாதைகள் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பலர் சுரங்கப்பாதைகள் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இது போன்றவைகளும் தடுக்கும் விதமாக பல சுரங்கப்பாதைகளை போக்குவரத்துக்காவல் அடைத்துள்ளது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருவதால் நகரில் பல சுரங்கப்பாதைகள் வெள்ள நீரால் மூடப்பட்டுள்ளது. இதனால் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் பலர் சுரங்கப்பாதைகள் முன்பாக நின்று புகைப்படம் எடுத்து வருகின்றனர். இது போன்றவைகளும் தடுக்கும் விதமாக பல சுரங்கப்பாதைகளை போக்குவரத்துக்காவல் அடைத்துள்ளது.
அதன்படி சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை பெருநகர போக்குவரத்தின் தற்போதைய நிலவரம், மழை நீர் பெருக்கு காரணமாக மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள்:
வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷபுரம் சுரங்கபாதை, அஜாக்ஸ் சுரங்கபாதை, கெங்கு ரெட்டி சுரங்கபாதை, மேட்லி சுரங்கபாதை, துரைசாமி சுரங்கபாதை, தாம்பரம் சுரங்கபாதை, அரங்கநாதன் சுரங்கபாதை, வில்லிவாக்கம் சுரங்கபாதை அடைக்கப்பட்டுள்ளது.
மழைநீர் தேங்கியுள்ளதால் கீழ்கண்ட சாலைகளில் போக்குவரத்து தடை பெற்றுள்ளது. கே.கே.நகர் ராஜ மன்னார் சாலை, மயிலாப்பூர் டாக்டர் சிவசாமி சாலை, ஈ.வி.ஆர். சாலை, காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை, செம்பியம், ஜவஹர் நகர், பெரவள்ளூர் 70 அடிசாலை, புளியந்தோப்பு டாக்டர் அம்பேத்கார் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பெரம்பூர் பெரக்ஸ் ரோடு, பட்டாளம் மணி கூண்டு, வியாசர்பாடி முதல் முல்லை நகர் பாலம் வரை.
மழைநீர் பெருக்கு காரணமாக செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஏற்பாடு: மாதவரம் போக்குவரத்து காவல் எல்லைக்குட்பட்ட எம்.ஆர்.எச்சாலை மஞ்சம்பாக்கம் ரவுண்டானாவில் இருந்து செங்குன்றம் நோக்கி செல்லும் வழியில் ரெட்டேரி நிரம்பி நீரானது வெஜிடேரியன் வில்லேஜ்ரோடு வழியாக புழல் கால்வாயை அடைவதால் எம்.ஆர்.எச். சாலையில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் நெடுஞ்சாலைதுறை மற்றும் போக்குவரத்து காவல்துறையின் மூலம் சாலை ஒருபக்கமாக மூடப்பட்டுள்ளது. உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வாகனங்கள் அனைத்தும் சாலையின் ஒரே பக்கத்தின் வழியாக செல்கின்றது. குமணன்சாவடி குன்றத்தூர் ரோடு ஒருபுறம் மூடப்பட்டுள்ளது.