தஞ்சாவூர்: 5 வயது பெண்குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: 3 மாதமாக 10 வயது சிறுவர்களால் சித்ரவதை!
5 வயது பெண் குழந்தைக்கு மூன்று மாதமாக 10 வயது சிறார்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
5 வயது பெண் குழந்தைக்கு மூன்று மாதமாக 10 வயது சிறார்கள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர், சோழன் நகரை சேர்ந்தவர் கலைச்செல்வன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரது மனைவி நூர்முகமது (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கர் ஆவார். இதனிடையே இவர்களுக்கு ஒரு மகன், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் அதே தெருவை சேர்ந்த 10 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்கள் 5 வயது குழந்தையை கடந்த 3 மாதமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவரது தாய் நூர்முகது குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் தற்போதுதான் எனக்கு தெரியவந்துள்ளது என கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்களிடம் கூறும்போது என்னை மிரட்டத் தொடங்கினர். மேலும் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனறார்.
எனவே பாதிக்கப்பட்ட தனது மகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும். அந்த சிறுவர்கள் நடமாடினால் சமுதாயத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கக்கூடியவர்கள். அவர்களை உடனடியாக காப்பகத்தில் அடைத்து வைக்க வேண்டும் என தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். 5 வயது குழந்தையை சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தஞ்சை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.
Source: Zeenews
Image Courtesy: Deccan Herald