நீதித்துறைக்கு அதிர்ச்சி உள்ளாக்கிய வழக்கு.. சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார்..
பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பாதிரியார் ஈடுபட்டிருக்கும் சம்பவம் நீதித்துறைக்கு அதிர்ச்சி உள்ளாக்கி இருப்பதாக நீதிபதி கருத்து.
மனநலம் குன்றிய சிறுமிக்கு பாலியல் தொலைத்த வழக்கில் பாதிரியார் மீது குண்டர் சட்டம் ஏற்கனவே போடப்பட்டு இருக்கிறது. தற்பொழுது அவர் மீது இருக்கும் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் ராத்திரிகாரராக இருப்பவர் ஜோசப் ராஜா என்பவர், இவர் கடந்த மே மாதம் அதே பகுதியை சேர்ந்த மனநலம் குற்றிய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். பின்னர் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது இந்த நிலையில் அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளை ரத்து செய்து கூறி அவருடைய மனைவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றே தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த வழக்கில் பேசிய நீதிபதிகள் இது பற்றி கூறுகையில், பாதுகாப்பு கொடுக்க வேண்டிய நபர்களை எப்படி கொள்ளையர்கள் ஆக மாறிவிட்டார்கள் என்று கருத்து தெரிவித்து இருக்கிறார். மேலும இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மீது இருக்கும் குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்றும், சாதாரண மனிதனை காட்டிலும் உயர்ந்த இடத்தில் வைக்கப்பட்ட ஒருவர் இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது நீதித்துறை அதிர்ச்சி உள்ளாக்கி இருக்கிறது என்றும் அவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
Input & Image courtesy: News