மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் இயக்கம்: சத்தம் இல்லாமல் நடக்கும் வேலைகள்!
சென்னையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் இயக்கத்தை RBI நடத்தியது.
இந்தியா G20 அமைப்பின் தலைமை பொறுப்பேற்றுள்ள சூழலில், அதன் மக்கள் பங்கேற்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, இந்திய ரிசர்வ் வங்கி - சென்னை மண்டல அலுவலகம் மெகா கடற்கரை தூய்மைப்படுத்தும் நிகழ்வை நடத்தியது. மார்ச் 18-ம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில், 'மர்ப்பு' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து இந்த இயக்கம் நடத்தப்பட்டது. இந்த இயக்கம் இந்தியாவின் G20 தலைமைத்துவ கருப்பொருளான "வசுதைவ குடும்பகம்" அல்லது "ஒரு பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம்" என்பதையும் மனித, விலங்கு, தாவர மற்றும் நுண்ணுயிரிகள் ஆகியவற்றின் ஒன்றோடொன்று இருக்கும் வாழ்வியல் மதிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.
இந்த இயக்கம், தூய்மை இந்தியா இயக்கத்தின் இந்திய அரசின் தேசிய அளவிலான பிரச்சாரத்தையும் ஜி20யின் நோக்கத்தையும் இணைத்து ஆரோக்கியமான சுகாதார நடைமுறைகள் தொடர்பாக மக்களிடையே மாற்றங்களைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. துப்புரவு நிகழ்ச்சியை, இந்திய ரிசர்வ் வங்கியின் சென்னை தலைமை பொது மேலாளர் திருமதி. உமா சங்கர் தொடங்கி வைத்தார். இதில் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
மேலும் இந்த நிகழ்ச்சிகள் பல்வேறு தன் ஆர்வலரகள் தானாக முன்வந்து பல்வேறு துப்புரவு பணிகளை செய்து தன் காரணமாக இனிமேல் மெரினா கடற்கரையில் இது போன்ற பணிகள் வரவேற்கத்தக்கது என்று மக்களிடையே ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News