தங்களை தாங்கிபிடிக்கும் ஊடகங்கள் மீதான வழக்கை ரத்து செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது ஆட்சிக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் சில செய்திகளை வெளியிட்டது. இதன் காரணமாக அப்போதைய அரசு பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தது.

Update: 2021-07-30 07:37 GMT

தமிழகத்தில் கடந்த 2012 முதல் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் மீது போடப்பட்ட சுமார் 90 அவதூறு வழக்குகளை திரும்பபெறுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது. அப்போது ஆட்சிக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்கள் சில செய்திகளை வெளியீட்டனர்  . இதன் காரணமாக அப்போதைய அரசு பத்திரிகை மற்றும் நாளிதழ்கள் மீது அவதூறு வழக்குகளை தொடுத்தது. 


இதனிடையே நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைத்தது. இதனால் கடந்த தேர்தல் வாக்குறுதியில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் மீதான அவதூறு வழக்குளை ரத்து செய்யப்படும் என கூறப்பட்டது.

அதன்படி தினசரி மற்றும் வாரப் பத்திரிகைகளின் ஆசிரியர், வெளியிட்டவர், தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் உள்ளிட்டவர்கள் மீது 90 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Source:தினமலர்

Image Courtesy: Google

Tags:    

Similar News