பால் விலை அதிகரித்தது கூட தெரியாமல் மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் - எழும் விமர்சனங்கள்!
தமிழகத்தில் பால் விலை குறைந்ததாக பேசிய முதல்வரின் பேச்சினால் தற்பொழுது அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள் பொதுமக்கள்.
தி.மு.க அரசு 2021 மே மாதம் பொறுப்பேற்றது முதல் தேர்தல் வாக்குறுதி படி, ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த நவம்பரில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூபாய் 12 உயர்த்தப்பட்டது. சமீபத்தில் நெய் விலை லிட்டருக்கு ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது, வெண்ணை கிலோவிற்கு ரூ. 20 ரூபாய் உயர்த்தப்பட்டு இருக்கிறது. எனவே தன்னுடைய வாக்குறுதிகளை அமல்படுத்துவதாக கூறி, அதிகமான விலை உயர்வு தற்போது ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். ஏற்கனவே GST வரி உயர்வு காரணம் காட்டி, நெய், வெண்ணெய்,தயிர், லஸ்ஸி,மோர் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு இருந்தது.
தீபாவளி பண்டிகை நேரத்தில் இனிப்புகளின் விலையும் ஆவின் நிறுவனம் உயர்த்துகிறது. ஆனால் ஆவின் பால் விலை மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், பால்வளத்துறை அமைச்சர் நாசர் இல்ல திருமண விழாவில் முதல்வர் அவர்கள் கலந்து கொண்டார். அப்பொழுது அவர் பேசுகையில், நாசர் பால்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றதும் பால் விலை குறைந்துள்ளது. இது மக்களுக்கு எவ்வளவு பெரிய சாதகமான சூழ்நிலை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பது, மக்களிடையே தற்பொழுது அதற்கு ஏற்படப்பு இருக்கிறது.
குறிப்பாக ஏற்கனவே பால் மற்றும் அதன் உபொருட்கள் சிலவற்றின் விலையில் ஆவின் நிறுவனம் உயர்த்துகின்ற நிலையில் தற்பொழுது பன்னீர், சீஸ், ஐஸ்கிரீம், குல்பி, நறுமணப் பொருட்கள், கூல் காபி, பால் பவுடர் பாதம், பிஸ்தா போன்றவற்றின் விலையும் உயர்த்தி தற்போது தீர்மானிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பான ஆலோசனையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் இடையில் முதல்வரின் இந்த ஒரு பேச்சு பொதுமக்களுடைய அதற்கு ஏற்படுத்தி இருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar