கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிஃப்ட்டில் மாட்டிக்கொண்ட மக்கள் - பரபரப்பில் ஊழியர்கள்!
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்ட்டில் மாட்டிக்கொண்ட மக்கள்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கூட்டம் ஒன்று நேற்று நடைபெற்றது. கலெக்டர் அலுவலகத்தின் 2-வது தளத்தில் தான் நடைபெற்றது இந்த கூட்டம். எனவே கூட்டத்தில் பல்வேறு மக்கள் கலந்துகொள்ள வருகை தந்துள்ளார்கள். கூட்டம் அதிகமாக இருந்த காரணத்தினால் பல்வேறு நபர்கள் லிப்டை பயன்படுத்தி இரண்டாம் தளத்திற்கு செல்ல முயற்சி செய்துள்ளார்கள். மேலும் கூட்டம் நிறைவடைந்ததும் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிஃப்ட் மீண்டும் பயன்படுத்தி பொதுமக்கள் லிஃப்டில் மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
கூட்டம் நிறைந்த நிறைவடைந்தவுடன் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 10 பேர் கீழ்தளத்தில் தளத்திற்கு வருவதற்கு முயற்சி செய்துள்ளார்கள் அப்போது இந்த லிப்ட் திடீரென பழுதாகி உள்ளது இதனால் தரை தளத்திற்கு வந்து நின்ற லிப்ட் கதவு திறக்கப்படவில்லை உள்ளே இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார் இது கலெக்டர் அலுவலக அதிகாரிகள் கதவை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களால் திறக்க முடியவில்லை பின்பு அங்கு பரபரப்பு ஏற்பட்டு அலுவலக ஊழியர்கள் முழுவதும் பரபரப்பில் காணப்பட்டார்கள்.
அதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் உடனடியாக களத்தில் இறங்கி வேலை செய்தார்கள். லிப்ட்டில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டு உள்ளார்கள். இந்த சம்பவம் தற்போது கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: Dailythanthi News