ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இடங்களில் ஆட்சியர் திடீர் ஆய்வு!
மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கின்ற வகையில் தருமபுரி மாவட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் காவிரி ஆற்றில் நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, நீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்துக்கு நாளை முதலமைச்சர் ஸ்டாலின் ஒகேனக்கல் குடிநீர் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி, கூட்டு குடிநீர் திட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது குடிநீர் திட்ட அலுவலர்களிடம் சரியான முறையில் சுத்திகரிக்க படுகின்றனா என்று கேட்டறிந்தார். இதன் பின்னர் தமிழ்நாடு பயணியர் தங்கும் விடுதியை ஆய்வு செய்தார்.