தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து ! மத்திய உளவுத்துறை தீவிர கண்காணிப்பு!
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்த அமைப்பு குறித்து தமிழகத்திலும், இந்தியாவிலும் சிலர் ஆதரவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.;
ஆப்கானிஸ்தானை தாலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றினர். இதனால் அந்த அமைப்பு குறித்து தமிழகத்திலும், இந்தியாவிலும் சிலர் ஆதரவான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் தாலிபான்களுக்கு ஆதரவாக சமூக வலைதள பதிவுகளை வெளியிடுவோரின் விவரங்களை மத்திய உளவுத்துறையினர் சேகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவான கருத்துக்களை பகிரும் சமூக வலைதள கணக்குகளின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் டெல்லிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் பற்றி விசாரணை நடத்துமாறு டெல்லியில் இருந்து தமிழக உளவுத்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.
எது எப்படியோ தமிழகத்தில் தாலிபான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக சில திரைப்பட இயக்குநர்கள் கூட கருத்து கூறியுள்ளனர் அது போன்றவர்களையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் என்பது இந்திய மக்களின் விருப்பமும் ஆகும்.
Source: Polimer
Image Courtesy:Hindustan Times
https://www.polimernews.com/dnews/153172/தமிழகத்தில்தாலிபான்களுக்கு-ஆதரவாகசமூக-வலைதளங்களில்-தகவல்வெளியிடுபவர்களை-மத்தியஉளவுத்துறை-கண்காணிப்பதாகதகவல்