திண்டுக்கல் அருகில் சர்ச் கட்ட முயற்சி: மனு கொடுத்து தடுத்த இந்து அமைப்பு!
திண்டுக்கல் அருகில் அனுமதி பெறாமல் சர்ச் கட்ட முயற்சித்த நிர்வாகிகள் மீது மனு கொடுத்த இந்து அமைப்பினர்.
திண்டுக்கல் அருகே அமைந்துள்ள பகுதி தான் கோபாலன் பட்டி. கோபாலன் பட்டியை சேர்ந்த இந்து அமைப்பு மக்கள் தொடர்பாளராக கார்த்திகை சுவாமி, மாவட்ட கலெக்டர் மற்றும் SP, RTO ஆகியோரிடம் அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை தொடர்ந்த சர்ச் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார். இந்தப் பகுதியில் எந்த ஒரு மத கட்டிடங்களும் வரக்கூடாது என்று ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது அனுமதி பெறாமல் தென்னிந்திய கிறிஸ்துவ கத்தோலிக்க இயக்கம் இங்கு சர்ச் ஒன்றை கட்டுவதற்கு ஏற்பாடு செய்தது.
இதற்கான கட்டுமான பொருட்களையும் குடியிருப்பு பகுதியின் உள்ளே கத்தோலிக்க இயக்கத்தைச் சேர்ந்த நபர்கள் கொண்டு வந்தார்கள். அவற்றை எதிர்க்கும் விதமாக இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக வேம்பார்பட்டி கிராமம் திருவேங்கடம் நகரில் குடியிருப்பு பகுதியில் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்திய கத்தோலிக்க கிறிஸ்தவ சபை என்ற சபையின் மீது நடவடிக்கை எடுக்குமாறும், அவர்கள் கொண்டு வந்த கட்டுமான பொருட்களை உடனடியாக அந்த பகுதியில் அகற்றுமாறும், இது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபடக் கூடாது என்று உறுதிமொழி பெற வேண்டும் என்று இந்து அமைப்பினர் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
Input & Image courtesy:Maalaimalar News