கட்டாயம் மதமாற்றம் தமிழகத்தில் இல்லவே இல்லை.. மனுவை தாக்கல் செய்த தமிழக அரசு.. அப்படினா இது எப்படி?
தஞ்சையை சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கட்டாயம் மதமாற்றம் பின்னணி காரணமாக இருக்குமா?
தமிழகத்தில் கட்டாயம் மதமாற்றும் கடந்த சில ஆண்டுகளாகவே இல்லவே இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தன்னுடைய பதில் மனுவை தாக்கல் செய்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை வழக்குக்கான மூல காரணத்தை கண்டறிவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பு மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தது. குறிப்பாக ஏழை, எளிய மக்களுக்கு பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவை அன்பளிப்பாக அளித்து அதற்கு பதிலாக அவர்களை மதமாற்ற சொல்லி வற்புறுத்துவது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும் என்று பா.ஜ.கவை சேர்ந்த அஸ்வின் குமார் சுப்ரீம் கோர்ட்டின் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
இது தொடர்பாக பதிலளிக்க மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு கொடுத்து இருந்தது. இந்த நிலையில் தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் பதில் மனுவில் தஞ்சை மாணவி லாவண்யா பேசிய வீடியோவை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. அந்த வகையில் தான் உண்மைகள் வெளிவரும் சிதம்பரம் நத்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ருத்ராட்சத்தை அணிவதற்காகவும், நெற்றியில் சந்தனம் போட்டு வைப்பதற்காகவும் 12 ஆம் வகுப்பு மாணவன் தாக்க பட்டதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது முற்றிலும் பொய்.
ஒருவர் தன் விரும்பும் எந்த ஒரு மதத்தையும் பின்பற்றும் உரிமை அரசியலமைப்புச் சட்டத்தின் படி உள்ளது. இதன்படி கிறிஸ்துவ மிஷனரிகளின் செயல்பாடுகள் சட்டத்திற்கு எதிரானதாக இல்லை. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித கட்டாயம் அது மாற்றமும் நடைபெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கை தமிழ்நாட்டிற்கு பொருந்தாது. பணம், பரிசுப் பொருட்கள் அளித்து மதமாற்றம் செய்யப்படுகிறது என்று கூறிய மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பதிலை அளித்து இருக்கிறது.
Input & Image courtesy: News